உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறிப்பு

வடபழனி:கோடம்பாக்கத்தில், சாலையில் நடந்து சென்றவரிடம் பணம், மொபைல்போன் பறித்த நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மாலிகா, 57. இவர், தன் இரண்டாவது மகன் திருமணத்திற்காக, சவுகார்பேட்டையில் துணி வாங்க, நேற்று முன்தினம் சென்றார். பின், இரவு 10:45 மணியளவில் மாநகர பேருந்தில் வந்த இவர், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, 'பைக்'கில் பின்தொடர்ந்து வந்த இருவர், மல்லிகா கையில் இருந்த பையை பறித்துச் சென்றனர். அந்த பையில், 10,000 ரூபாய் மற்றும் மொபைல்போன் இருந்துள்ளது. இதுகுறித்த புகாரின்படி, கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை