உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் எஸ்.எஸ்.ஐ., மயங்கி விழுந்து உயிரிழப்பு

பெண் எஸ்.எஸ்.ஐ., மயங்கி விழுந்து உயிரிழப்பு

பெரவள்ளூர், பெரவள்ளூர், ராமகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா, 49; பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்; திருமணமாகவில்லை.அயனாவரம், பழனியப்பா முதல் தெருவில் வசிக்கும் அக்கா பாண்டிசெல்வி வீட்டில், நேற்று பேசி கொண்டிருந்தபோது, திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.குடும்பத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.அவரது உடல் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள வம்புரம்பட்டிக்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ