மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் பதுக்கிய பெண் கைது
03-Oct-2025
குன்றத்துாரில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது
03-Oct-2025
சில வரி செய்திகள்
03-Oct-2025
ருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
03-Oct-2025
காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏலம் கூடம் அருகில், பைபர் படகுகளை நிறுத்தி வைத்து பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வர்.இங்கு, 'வீல் ஹவுஸ்' என்கிற படகு வீட்டில் வெல்டிங் பொருட்களை வைத்து தாஸ் என்பவர், படகுகளுக்கு வெல்டிங் வேலை செய்து வந்து உள்ளார்.இந்த நிலையில், நேற்று அங்கு திடீரென தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ, அருகில் உள்ள ரிக் ஷா வண்டியில் மளமளவென பரவியது.அங்கிருந்த வலைகள், விசைப்படகுகளின் உதிரி பாகங்கள் மற்றும் குப்பையும் கொழுந்து விட்டு எரிய துவங்கின.சுதாரித்த மீனவர்கள் வலைகளை எடுத்து அப்புறப்படுத்தினர். அதற்குள் ராயபுரம், கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025