உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பால்கனி விழுந்து பூ வியாபாரி பலி

பால்கனி விழுந்து பூ வியாபாரி பலி

வடபழனி, வடபழனி கணேஷ் அவென்யூவைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 50. இவர், சக்திவேல் என்பவரது வீட்டில், கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகைக்கு தங்கியுள்ளார். 25 ஆண்டு பழமையான இந்த கட்டடத்தில், ஆறு வீடுகள் உள்ளன.சூளைமேடு, பெரியார் பாதையை சேர்ந்த பூ வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி, 65, என்பவர், நேற்று மாலை 6:00 மணியளவில் இங்கு வந்துள்ளார். அப்போது வரலட்சுமி, முதல்தள பால்கனியில் நின்று, கிருஷ்ணமூர்த்தியிடம் பூ வாங்க, கயிற்றில் கூடையை கட்டி கீழே அனுப்பினார்.அப்போது, திடீரென பால்கனி உடைந்து கீழே விழுந்தது. இதில், கிருஷ்ணமூர்த்தி மீது கட்டட இடிபாடுகள் விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.கீழே விழுந்த வரலட்சுமிக்கு, இடது காலில் காயம் ஏற்பட்டது. தகவலின்படி வந்த வடபழனி போலீசார், கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி