உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பறக்கும் படை அலுவலர் ரகளை

பறக்கும் படை அலுவலர் ரகளை

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரைச் சேர்ந்தவர் மாரிராஜன், 32; காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை உதவி அலுவலர்.பல்லாவரம் சட்டசபை தொகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலராக பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை, மது அருந்தி வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார்.வழியில், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு டீக் கடையில், பலகாரம் எடுக்கும்போது, கடை ஊழியருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடை ஊழியர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சைதாப்பேட்டை போலீசார், மாரிராஜனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாரிராஜன் மனைவி, கணவருக்காக கடை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்