உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாக்டர் உட்பட நால்வருக்கு மருத்துவமனையில் மூச்சுத்திணறல்

டாக்டர் உட்பட நால்வருக்கு மருத்துவமனையில் மூச்சுத்திணறல்

ஆவடி, ஜூலை 11--ஆவடி, புதிய ராணுவ சாலையில், 'அட்வான்ஸ்டு க்ரோ ஹேர் அண்டு க்ளோ ஸ்கின் கிளினிக்' எனும் தலைமுடி சிகிச்சை மற்றும் முகப்பொலிவூட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை உள்ளது.நேற்று முன்தினம் இரவு, இம்மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது. இதனால், பெட்ரோல் ஊற்றி ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. பெட்ரோல் கசிவு காரணமாக, இதிலிருந்து வெளியேறிய புகையில், பெட்ரோல் நெடி அதிகமாக இருந்தது.இதை நுகர்ந்த, கிளினிக்கில் இருந்த அம்பத்துாரைச் சேர்ந்த டாக்டர் வினோதினி, 24, பெரம்பூரைச் சேர்ந்த செவிலியர் காயத்ரி, 20, அனிதா, 24, அன்பு, 41, ஆகிய ஊழியர்களுக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள், உடனடியாக, ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை