உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீபாவளி சீட்டு நடத்தி மோசடி

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி

திரு.வி.க.நகர், திரு.வி.க.நகர், கென்னடி ஸ்கொயர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ஆனந்தி,41. இவர் அதேபகுதியை சேர்ந்த மைதிலி என்கிற திவ்யா,30, என்பவரிடம் தீபாவளி சீட்டு சேர்ந்துள்ளார். இவர் மட்டுமல்லாது 100க்கும் மேற்பட்டோர், 2022 முதல் மாதம் 1,000 ரூபாய் மற்றும் 1,500 ரூபாய் வீதம் இரண்டு சீட்டில் சேர்ந்துள்ளனர். சீட்டு முடிந்து இதுவரை பணம் தரப்படவில்லை. வீட்டை விற்று பணம் தருவதாக கூறிய நிலையில், 10 நாட்களுக்கு, முன் வீட்டை விற்று விட்டு திவ்யா மாயமாகியுள்ளார். சீட்டு கட்டியோர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, புழல் பகுதிக்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சீட்டு கட்டி ஏமாந்த 30க்கும் மேற்பட்டோர், திவ்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திரு.வி.க.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மொத்தம், 6 லட்ச ரூபாய் வரை சீட்டு பணத்தை திவ்யா ஏமாற்றி விட்டதாக புகார்தாரர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை