உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைக்காரர் மீது மோசடி புகார்

கடைக்காரர் மீது மோசடி புகார்

வேப்பேரி, பெரம்பூரைச் சேர்ந்தவர் முகமது அகில் உசைன், 43. இவர், 'வந்தா வெட்டுவோம்' என்ற பெயரில், சலுான் கடைகாரர். இவர் முதலீடு ஆசைக்காட்டி 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதில், 'சலுான் கடையில் முதலீடு செய்தால், மாதந்தோறும், 2 லட்சம் ரூபாய் லாபம் தருவதாகவும், லாபம் கிடைக்காவிட்டால் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். ஆனால், ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை