உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜெம் மருத்துவமனையில் இலவச பரிசோதனை

ஜெம் மருத்துவமனையில் இலவச பரிசோதனை

சென்னை, சென்னை, பெருங்குடி, எம்.ஜி.ஆர்., சாலையில், 'ஜெம்' மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இரப்பை குடல், லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் முன்னோடி மருத்துவமனையாக, இது செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில், பெருங்குடல் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் 30ம் தேதி வரை இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.தினமும் காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை, குடல் தொடர்பான பரிசோதனை, ரத்த பரிசோதனை, தேவைப்படுவோருக்கு, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதற்காக, 72006 05493 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.இதுகுறித்து, மருத்துவமனையின் தலைவர் சி.பழனிவேலு கூறியதாவது:ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் பெருங்குடல் தொடர்பான பல நோய்கள் ஏற்படுகிறது. மேற்கத்திய உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், குடல் நோய்கள் ஏற்படுகின்றன. மலச்சிக்கல், மலத்தில் ரத்தம் கசிதல், மலம் கழிக்கும்போது வலி, ஆசனவாயில் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கிறது.இவற்றினால் பாதிக்கப்படுவோர், தயக்கமின்றி டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை