உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

சென்னை, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடந்த, மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமை, மாநகராட்சி மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார்.பின், அவர் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பில், சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனைகள் மாநகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறைகளுக்கு உட்பட்ட பணியாளர்களான 11,931 பேருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.இதில், முழு ரத்த பரிசோதனைகள், ரத்த கொழுப்பு, சிறுநீரக ரத்த பரிசோதனை, தைராய்டு, கல்லீரல் பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், எச்.ஐ.வி., பரிசோதனை, வயிறு, கண், காது பரிசோதனை உள்ளிட்வை அடங்கும்.மேலும், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள், அனைத்து பணியாளர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.இந்த மருத்துவ முகாம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனைகளில் நடக்கின்றன. கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால், அரசின் திட்டங்களில் ஒன்றிணைத்து சிகிச்சை வழங்கப்படும்.டெங்கு காய்ச்சலுக்கு, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில், 87 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தாண்டு செப்டம்பரில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு குறைவாக உள்ளது.மழைநீர் வடிகால் பணிகள், கொசஸ்தலை ஆறு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. செப்., மாதத்திற்கு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ