உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொடர் பைக் திருட்டு 3 பேர் கும்பல் கைது

தொடர் பைக் திருட்டு 3 பேர் கும்பல் கைது

விருகம்பாக்கம், சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 21. கடந்த மார்ச் 27ம் தேதி, வீட்டு வாசலில் நிறுத்திய இவரது பைக் திருடு போனது.புகாரை விசாரித்த விருகம்பாக்கம் போலீசார், நேற்று இந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்தனர்.விசாரணையில் இவர்கள் மாங்காடு, வசந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத்,22, திருவேற்காடு, சிவசங்கர் நகரைச் சேர்ந்த தீபன்குமார்,20, அய்யப்பன்தாங்கல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ்,22, என தெரிந்தது.மேலும், இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மாங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதிகளில், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
மே 28, 2024 18:33

இது மாதிரியான இளைஞர்கள் என்ன படிப்பு படித்திருக்கிறார்கள் என்பதையும் செய்தியில் கொடுத்தால் நல்லது ஏனென்றால் இன்றைய கல்வி முறையில் அளவுக்கு அதிகமாக பட்டதாரிகள் உருவாகி அவர்கள் கேட்ட வேலை வாய்ப்புகளை அளிக்காததால் இம்மாதிரியாக நடந்து கொள்கிறார்களா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை