உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா வியாபாரி கைது

கஞ்சா வியாபாரி கைது

ஓட்டேரி:ஓட்டேரி பாலம் அருகே, நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், டிரைவர் சீட்டிற்கு கீழே, பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், கொசப்பேட்டை, தேவராஜ் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 21, என்பவர், புளியந்தோப்பு, கே.பி.பார்க்கில் இருந்து, 25,000 ரூபாய்க்கு வாங்கி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ