உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாசர்பாடியில் கஞ்சா ஆயில் பறிமுதல்

வியாசர்பாடியில் கஞ்சா ஆயில் பறிமுதல்

எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 21. இவர், நேற்று கஞ்சா போதையில் வீட்டில் தகராறில் ஈடுபடுவதாக இவரது தாய், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, வீட்டில் இருந்த 630 கிராம் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1.50 லட்ச ரூபாய்.கஞ்சா ஆயிலை வைத்திருந்த டிரைவர்களான ஸ்ரீராம், 21, மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த பர்வேஸ், 23, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், டிரைவர்களான இருவரும் கடந்த ஜூன் 25ம் தேதி, ஒடிசா சென்று திரும்பி வரும்போது, கேரளாவைச் சேர்ந்த அருண் என்பவர், ஆந்திரா, அனக்கப்பள்ளி என்ற இடத்தில் இருந்து 300 எம்.எல்., கொண்ட இரு பாட்டில்களில் கஞ்சா ஆயில் வாங்கி வருமாறு கூற, இவரும் கஞ்சா ஆயில் வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளனர்.பின் வீட்டில் இருந்த கஞ்சா ஆயிலை ஸ்ரீராம் பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்ட போது, போலீசில் சிக்கியது தெரியவந்தது. இதில் தலைமறைவான கேரளாவைச் சேர்ந்த அருணை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை