உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 50 சதவீத ஆபரில் விருந்து 2 நாள் வழங்குகிறது கீதம்

50 சதவீத ஆபரில் விருந்து 2 நாள் வழங்குகிறது கீதம்

சென்னை, ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள 'கீதம்' சைவ உணவகங்களில் 'நாளை மற்றும் நாளை மறுதினம் 50 சதவீத தள்ளுபடியில் சுவையான விருந்து வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கீதம் சைவ உணவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கீதம் சைவ உணவகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு நாளை, நாளை மறுதினம், 50 சதவீத தள்ளுபடியில் சுவையான விருந்து வழங்கப்படும்.'பார்சல்' மற்றும் 'ஆன்லைன்' சேவைகள் வாயிலாக, நாளை இச்சலுகையை பெறலாம். நாளை மறுநாள் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான 'சொமாட்டோ'வுடன் பிரத்யேக கொண்டாட்டம் தொடரும்.ஆன்லைனில் ஆர்டர் செய்வதை எளிதாக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இச்சலுகையை பெறலாம். கீதம் சைவ உணவகத்தின் ஆண்டு விழாவை மைசூர் பாக்குடன் கொண்டாட அழைக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ