உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் பங்களிப்பால் அரசு பள்ளி புதுப்பொலிவு

தனியார் பங்களிப்பால் அரசு பள்ளி புதுப்பொலிவு

தண்டையார்பேட்டை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ், 1.77 கோடி ரூபாய் செலவில், புதுப்பொலிவுடன் மாநகராட்சி பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆடிட்டோரியம் மற்றும் அங்கன்வாடி மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.இந்த நிதியின் கீழ், தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெரு சென்னை தொடக்கப் பள்ளி, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆடிட்டோரியம் கட்டப்பட்டது.தண்டையார்பேட்டை, வினோபா நகர், 1வது தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் 33 லட்சம் ரூபாய் 'ஏசி' வசதியுடன் அமைக்கப்பட்டது. மேலும்,69 லட்சம் ரூபாய் செலவில் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 'ஸ்மார்ட் 3 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வடசென்னை எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.டி.சேகர், எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி