உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் சிறையில் கேன்டீன் ஐகோர்ட்டில் அரசு பதில்

புழல் சிறையில் கேன்டீன் ஐகோர்ட்டில் அரசு பதில்

சென்னை, 'சென்னை புழல் சிறையில், கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை' என, உயர் நீதிமன்றத்தில், சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, விசாரணை கைதியான பக்ருதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கைதிகளுக்காக இயங்கி வந்த கேன்டீன், கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு விட்டது. கேண்டீன் தொடர்ந்து இயங்கும் வகையில், அதை திறக்க உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.மனு, நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத், லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.பக்ருதீன் சார்பில், வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, ''கேன்டீன் மூடப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை. கேன்டீனை திறக்கக் கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.சிறை நிர்வாகம் சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ''கேன்டீன் மூடப்படவில்லை. தற்போதைய நிலை குறித்து, அறிக்கை தாக்கல் செய்கிறேன்,'' என்றார். இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 12 க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி