உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போக்குவரத்து போலீசாருக்கு செவித்திறன் பாதுகாப்பு கருவி

போக்குவரத்து போலீசாருக்கு செவித்திறன் பாதுகாப்பு கருவி

சென்னை, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போலீசாரின் செவித்திறன் பாதுகாப்புக்கு நவீன கருவி வழங்கப்பட உள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் விதமாக, 284 இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில், சுழற்சி முறையில், 2,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, ஒலி மாசால் செவித்திறன் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசாரின் செவித்திறன் பாதுகாப்புக்கு நவீன கருவி வழங்கப்பட உள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள 'நாய்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக இந்த கருவிகள், போலீசாருக்கு வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை