உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹாக்கி மைதானம் சீரமைப்பு பணி துவக்கம்

ஹாக்கி மைதானம் சீரமைப்பு பணி துவக்கம்

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், அம்பேத்கர் சிலை அருகே, பழண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இதை பல ஆண்டுகளாக ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் சிலம்பப் பயிற்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள், இங்கு முறையாக பயிற்சி பெற்று தேசிய, மாநில அளவில் ஹாக்கி வீரர்களாக உருவாகியுள்ளனர். ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பிலீப்பும் இங்கு விளையாடி உள்ளார்.இங்கு பயிற்சி பெற்றவர்கள் ரயில்வே, காவல் துறை, வங்கிகள், ஏ.ஜி.எஸ்., அலுவலகம், வருமான வரித்துறை போன்ற அரசு துறைகளில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.கடந்தாண்டு பெய்த மழையினால், இந்த மைதானம் சேதமடைந்து மழைநீர் தேங்கி சகதியாக காணப்பட்டது. இதனால், இளைஞர்கள் ஹாக்கி பயிற்சி பெற முடியாமல் தவித்தனர். இத்தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அன்பரசன் சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த இடம் மணல் கொட்டி சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ