உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிகளுக்கான ஹாக்கி போட்டி ஐ.சி.எப்., செயின்ட் பால்ஸ் அபாரம்

பள்ளிகளுக்கான ஹாக்கி போட்டி ஐ.சி.எப்., செயின்ட் பால்ஸ் அபாரம்

சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், டி.எஸ்.எச்.எல்., எனும் 'தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக்' போட்டிகள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று துவங்கின. சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நேற்று துவங்கின.அவற்றில், டான்பாஸ்கோ, ஐ.சி.எப்., - செயின்ட் பால்ஸ், தி இந்து, அஞ்சுமன் உள்ளிட்ட ஆறு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன.நேற்று காலை நடந்த போட்டியில், செயின்ட் பால்ஸ் பள்ளி அணி, 8 - 0 என்ற கோல் கணக்கில் தி இந்து பள்ளியை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில், ஐ.சி.எப்., மற்றும் அஞ்சுமன் அணிகள் மோதின. அதில், 6- 0 என்ற கணக்கில் ஐ.சி.எப்., பள்ளி வெற்றி பெற்றது.தி இந்து பள்ளி மற்றும் மதரஸா ஆசம் பள்ளிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 5 - 0 என்ற கணக்கில் மதரஸா ஆசம் பள்ளி வெற்றி பெற்றது. செயின்ட் ஜோசப் பள்ளி, 3 - 1 என்ற கோல் கணக்கில் மறைமலர்நகர் பள்ளியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை