உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு வேன் பார்க்கிங் செய்து அடாவடி

தி.நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு வேன் பார்க்கிங் செய்து அடாவடி

தி.நகர்:தி.நகர் முத்துரங்கன் சாலையில் உள்ள மாநகராட்சி நடைபாதை, லோடு வேன் 'பார்க்கிங்' பகுதியாக மாறி உள்ளது. சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 141வது வார்டு தி.நகரில், முத்துரங்கன் தெரு உள்ளது. இச்சாலை தி.நகர் மற்றும் கண்ணம்மாப்பேட்டை பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையோரம், வரிசையாக மினி லாரிகள் மற்றும் லோடு வேன்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.அத்துடன் இரவு நேரத்தில், அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மறைவில், சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது மற்றும் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சில நேரங்களில், அவ்வழியாகச் செல்லும் பெண்களை கிண்டல் செய்வதாகவும் கூறுகின்றனர். இப்பகுதி மக்களின் புகாரையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, கடந்த ஆண்டு மே மாதம் போலீசார் அகற்றினர்.ஆனால், அடுத்த சில நாட்களில் மீண்டும், நடைபாதையில் லோடு வேன்கள் நிறுத்தப்பட்டன. எனவே, இப்பிரச்னைக்கு போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்த ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்ற முடியவில்லை என்றால், நடைபாதையில் வாகனம் நிறுத்த அனுமதி வழங்கி, அதற்கான கட்டணத்தை மாநகராட்சி வசூலிக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை