உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

மெரினாவில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

மெரினா,பெங்களூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத், 25. இவர், ஆவடியில் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார். நேற்று காலை, 5:30 மணியளவில், மெரினா காமராஜர் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்றார்.அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இருவர், சாலையில் கிடந்த கல்லை எடுத்து, மஞ்சுநாத் மீது வீசினர். இதில், மஞ்சுநாத்தின் மேல் தாடை பல் உடைந்து, வலியால் துடித்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள், மஞ்சுநாத்தின் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.மெரினா பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் சுற்றுலா பயணியர் அச்சமடைந்துள்ளனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ