உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் அவதி

சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் அவதி

வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தில், சுரங்கப்பாலத்தின் சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சென்னை, அண்ணா நகர் மண்டலத்தில், 94வது வார்டில், வில்லிவாக்கம் சுரங்கப்பாலம் உள்ளது.இங்குள்ள சுரங்கப்பாலத்தின் இருபுறங்களிலும், சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சுரங்கப்பாலத்தில் குறைந்தபட்சம் பராமரிப்பு கூட, மாநகராட்சி மேற்கொள்வதில்லை. குறிப்பாக, சுரங்கப்பாலத்தின் சர்வீஸ் சாலையை, இருபுறங்களிலும் கடைகள் மற்றும் பழுது வாகனங்கள் அத்துமீறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை