| ADDED : ஏப் 26, 2024 12:20 AM
சென்னை, சென்னை, அம்பத்துாரில், டி.ஐ., பள்ளி செயல்பட்டு வருகிறது. 'யு.என்.,' வகுத்துள்ள தர வரிசையை அடையும் வகையில், இப்பள்ளியில் 'இயற்கை ஆர்வலர் குழு' அமைக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகள், பறவைகளின் ஒலி, மரம், செடி, கொடிகள், வித்துக்கள், பூச்சிகள் போன்ற ஆராய்ச்சிகளில் போட்டிகள் நடத்தி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனால், படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களாக மாறுகின்றனர்.இதுபோன்ற போட்டி களில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி, எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், நேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.