| ADDED : ஜூன் 13, 2024 11:42 PM
அடையாறு மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், 10 கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வாரியம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். சாலை சீரமைப்பு உட்பட 24 திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுகவுன்சிலர்கள் பேசியதாவது:கிண்டி, சைதாப்பேட்டையில் உள்ள பிரதான சாலைகள், வடிகால்கள் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளன. அத்துறையினர் கூட்டத்திற்கு வருவதில்லை. வேளச்சேரியில், உடற்பயிற்சி கூடம், மண்டபம் கட்ட வேண்டும். திருவான்மியூர், பெசன்ட் நகரில் கிடப்பில் போட்ட திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழைக்கு முன் சாலை பணி, வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கடந்தாண்டு பருவமழைபோல், பாதிப்பு இல்லாமல் துார் வாரும் பணியை வேகப்படுத்த வேண்டும். அடையாறு ஆற்றில் சேரும் வடிகால், கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.