உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொகுதிக்கு வராத எம்.பி., விமர்சித்தவருக்கு மிரட்டல்

தொகுதிக்கு வராத எம்.பி., விமர்சித்தவருக்கு மிரட்டல்

பள்ளிப்பட்டு, திருவள்ளூர், பள்ளிப்பட்டு நகரைச் சேர்ந்தவர் பா.ஜ., தொண்டர் கிரண்குமார், 42. இவர் சமூக வலைதளங்கில், ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், 'அரக்கோணம் தொகுதி தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், வரும் லோக்சபா தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, அரக்கோணம் தொகுதிக்கு வரவில்லை. மீண்டும் அவருக்கே ஓட்டளிக்க போகிறீர்களா' என பேசியிருந்தார்.இந்நிலையில், திருத்தணியைச் சேர்ந்த தி.மு.க., உறுப்பினர் விஜயகுமார் என்பவர், கிரண்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். கட்சி தலைவரை பற்றி எப்படி அவதுாறாக பேசலாம் என, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கிரண்குமார், பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை