உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திண்டுக்கல் தலப்பாக்கட்டி 23 வகை பிரியாணி அறிமுகம்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி 23 வகை பிரியாணி அறிமுகம்

சென்னை, திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் 'தி கிரேட் இந்தியன் பிரியாணி திருவிழா'வை அறிமுகம் செய்துள்ளது. இதில், சைவம், அசைவம் என, 23 வகை பிரியாணி ஜூலை 8ம் தேதி வரை கிடைக்கும்.இது குறித்து, திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி இயக்குனர் ரவிக்கண்ணன், தலைமை தொழில் அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:பல வகையான பிரியாணி சாப்பிடுவதற்கு, வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப இப்போது 23 வகைகளில் பிரியாணி கொண்டு வந்துள்ளோம்.வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவுகளில் நிச்சயமான, 'கேஷ்பேக்' 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வழங்கப்படும். இந்த சலுகை ஜூலை 8ம் தேதி வரை கிடைக்கும்.எங்களுடைய பிரியாணி மசாலா என்பது ரகசியமானவை. அதனால் தான் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். உணவு தர கட்டுப்பாட்டுக்கென நிபுணர் குழுவை வைத்து உணவுகளை பரிசோதிக்கிறோம்.மட்டன் கோலா பிரியாணி, கீ ரைஸ் பன்னீர் பிரியாணி, அமர்வதி பிரியாணி, 'கன் பையர்' சிக்கன் பிரியாணி என, 23 புதிய வகை பிரியாணி கிடைக்கும்.'கிரேட் இந்தியன் பிரியாணி திருவிழா' தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் உட்பட, 103 கிளைகளிலும் நடக்கிறது. எங்கு சென்றாலும், ஒரே சுவையில் சாப்பிட்ட உணர்வு எங்கள் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ