மேலும் செய்திகள்
தற்காப்பு கலை பயிற்சி முகாம்
05-Sep-2024
சென்னை, மாநகராட்சி பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சென்னை மாநகராட்சி 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில், பள்ளி மாணவியருக்கு, கராத்தே, டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும் என, மேயர் பிரியா அறிவித்தார்.அதன்படி, திரு.வி.க., நகர் குக்ஸ் சாலை உயர்நிலைப் பள்ளியில், மாணவியருக்கான கராத்தே, டேக்வோண்டா பயிற்சியை, மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார்.அதேபோல், ராயபுரம் மணிகண்டன் தெரு உயர்நிலைப்பள்ளி; ஆர்.கே.நகர் புத்தா தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி. மேலும், திருவான்மியூர் மேல்நிலை பள்ளி; காலடிப்பேட்டை மேல்நிலைப் பள்ளிகளிலும், கராத்தே பயிற்சி நேற்று துவங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்களில், 75 நிமிடங்கள், பயிற்சி அளிக்கப்படும்.இப்பயிற்சி ஆறு மாதம் வரை நடக்கும். மண்டல, மாவட்ட, தேசிய அளவில் நடக்கும் கராத்தே போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இப்பயிற்சி வழங்கப்படும்.
05-Sep-2024