உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொற்று நோய் பிறப்பிடமாக மாறிய காசிமேடு குடியிருப்பு

தொற்று நோய் பிறப்பிடமாக மாறிய காசிமேடு குடியிருப்பு

காசிமேடு, ஜீவரத்தினம் நகர் நகர்ப்புற வாழ்வாதார குடியிருப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கழிவுநீர் குழாய்கள் உடைந்து கழிவுநீர் வெளியேறி, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பாதாள சாக்கடை நிரம்பி இப்பகுதியில் கழிவுநீர் ஆறுபோல ஓடுவதோடு, கழிவுநீர் குட்டையாக தேங்கி உள்ளது. குப்பையும் குவிந்துள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, தொற்று நோய்களின் பிறப்பிடமாக மாறி உள்ளது.மழைக்காலத்திற்கு முன் குப்பையை அகற்றி, கழிவு நீர் குழாய் உடைப்பு, பாதாளச் சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறுவதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.- விநாயக மூர்த்திகுடியிருப்புவாசி, ஜீவரத்தினம் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ