உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

சென்னை, கிண்டி, மாங்குளம், எம்.கே.என்.சாலையில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, இன்று மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடப்புறப்பாடு நடக்கிறது. காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள் அனைத்து கோபுர சன்னிதிகளுக்கும் கும்பநீர் சேர்க்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ