| ADDED : ஜூன் 13, 2024 05:34 PM
படப்பை:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் மதன்குமார், 35. இவர், படப்பை அருகே தங்கி, ஸ்ரீபெரும்புதுார், மலைப்பட்டில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம், தன் 'யமஹா எப்.இசட்' இருசக்கர வாகனத்தில், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது.இதில் பலத்த காயமடைந்த மதன்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.