உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லட்சுமி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

லட்சுமி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

பெரம்பூர், பெரம்பூர், லட்சுமி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலில், பிரபாகரன் என்பவர் செயல் அலுவலராக உள்ளார்.கடந்த ஒரு மாதமாக, இக்கோவிலில் பணியாற்றி வருகிறார். கோவிலில் கூடுதலாக ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அந்த உண்டியலை திறந்து, காணிக்கை எடுத்து விட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, கோவில் பாதுகாவலரை மிரட்டி, உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணம் 5,000 ரூபாய் வரை இருந்ததாக கூறப்படுகிறது. மர்மநபர்கள் மூவர் எடுத்துச் சென்றுள்ளனர்.இது குறித்து பிரபாகரன் அளித்த புகாரையடுத்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி