உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்து அபாயத்தில் தரைப்பால பயணம்

விபத்து அபாயத்தில் தரைப்பால பயணம்

புழல் அருகே கதிர்வேடில் இருந்து அம்பத்துார் செல்லும் சூரப்பட்டு சர்வீஸ் சாலையை இணைக்கும் தரைப்பாலத்தில், தடுப்பு சுவர் இல்லை. வைக்கப்பட்டுள்ள தடுப்பு கற்களும் அதிக இடைவெளியில் உள்ளன.தெருவிளக்குகளும் சரிவர எரியாத காரணத்தால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வாய்காலில் பாயும் நிலை உள்ளது.இவ்வழியே, இரண்டு இடங்களில் இதுபோன்ற தரைப்பாலங்கள் உள்ளன. அவற்றின் நிலைமையும் இது தான். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தரைப்பாலங்களில் கூடுதல் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இரவில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க, தடுப்பு கற்களில் 'ரிப்ளக்டர்' எனும் எதிரொலிப்பான் அமைக்கப்பட வேண்டும்.- அபிேஷக் குமார்,வாகன ஓட்டி, சூரப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்