உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மடிப்பாக்கம் சாலைகளுக்கு விமோசனம்

மடிப்பாக்கம் சாலைகளுக்கு விமோசனம்

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கத்தில் 187, 188 என, இரு வார்டுகள் உள்ளன. இங்கு, 2022ல் பாதாள சாக்கடை அமைக்கும் பணி, 256.90 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டது. மழை காரணமாக, மொத்த பணி காலத்தில் 11 மாதங்கள் வேலை நடக்கவில்லை.இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் பணிகள் தீவிரமடைந்ததால், வார்டு 188க்கு உட்பட்ட பகுதியில், 298 தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் பொருத்தப்பட்டன.பின், இந்த பள்ளங்கள் சரியாக மூடப்படாததால், சாலையில் ஏற்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி, மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறின.பல தெருக்களில், வீடுகளில் உள்ள வாகனங்களைக்கூட வெளியே எடுக்க முடியவில்லை. இது குறித்து நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, மாநகராட்சி அதிகாரிகள் சிறப்புக் கவனம் எடுத்து, தற்போது சாலைகளை சீரமைக்கும் பணிகளை துவக்கி உள்ளனர்.முதற்கட்டமாக, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை, சிமென்ட் கலவையால் மூடும் பணிகள் நடக்கின்றன.பெருங்குடி மண்டல செயற்பொறியாளர் முரளி கூறியதாவது:வார்டு 188க்கு உட்பட்ட பகுதிகளில், முன் விவசாயம் நடந்ததால், மண்ணில் நெகிழ்வு தன்மை அதிகம். அதனால், பள்ளங்களை சீரமைக்க மண் கலவை கொட்டி சரிசெய்தாலும், மழைநீர் தேங்கும் போது, மீண்டும் சகதியாகி விடுகிறது.பள்ளங்களில் சிமென்ட் கலவை நிரப்பி, சாலை அமைத்தால் மட்டுமே தாங்கும். அதனால், குபேரன் நகர், ராம் நகர், எல்.ஐ.சி., நகர் உள்ளிட்ட தெருக்களில், பாதாள சாக்கடை பணியால் ஏற்பட்ட பள்ளங்களில் சிமென்ட் கலவை கொட்டி சரிசெய்யப்படுகிறது. இதையடுத்து, புதிய சாலை அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ