உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி ரயில்வே கேட் பழுது; ரயில்கள் தாமதம்

லாரி மோதி ரயில்வே கேட் பழுது; ரயில்கள் தாமதம்

மேல்மருவத்துார், செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கத்தில், வந்தவாசி- - செய்யூர் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே ரயில்வே கேட் உள்ளது.மூடியிருந்த இந்த கேட்டின் மீது, கனரக லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயில்வே கேட் சேதமடைந்து, சிக்னல் கோளாறு ஏற்பட்டது.இதன் காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ராமேஸ்வரம், முத்துநகர், அனந்தபுரி, நெல்லை உள்ளிட்ட விரைவு ரயில்கள், செங்கல்பட்டு, கருங்குழி, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள், ரயில்வே கேட் மற்றும் சிக்னல் பழுதை சரி செய்தனர்.ஒரு மணி நேரத்திற்கு பின், நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், ரயில் பயணியர் அவதி அடைந்தனர்.

மறைமலை நகர்

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை, தினமும் திருக்கச்சூர், ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்து சென்று வருகின்றனர்.மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும், இந்த வழியே சென்று திரும்புகின்றன.நேற்று மாலை, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து திருக்கச்சூர் நோக்கி சென்ற ஆட்டோ ஒன்று, எதிர்பாராத விதமாக ரயில்வே கேட் மீது மோதி விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.ஆட்டோ மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்து, சிக்னல் பழுதடைந்தது.இதன் காரணமாக, வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகலவறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர். செங்கல்பட்டு -- திருவள்ளூர் வரை இயக்கப்படும் 82சி அரசு பேருந்து, மறைமலை நகர் வழியாக இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ