உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடு காப்பகத்தில் இருந்து மஹாராஷ்டிரா சிறுவன் எஸ்கேப்

காசிமேடு காப்பகத்தில் இருந்து மஹாராஷ்டிரா சிறுவன் எஸ்கேப்

காசிமேடு:சென்னை, சென்ட்ரல் பகுதியில், நான்கு நாட்களுக்கு முன், 8 வயது சிறுவன் சுற்றித்திரிந்துள்ளான். அதைப் பார்த்த போலீசார், சிறுவனிடம் விசாரித்தனர்.விசாரணையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரோஷன், 8, என தெரியவந்தது. தவிர, சென்னை வந்த விபரம் தெரியவில்லை. சிறுவனை மீட்ட போலீசார், காசிமேடு, சூரியநாராயணா சாலையில் உள்ள, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில், ரோஷனை, நேற்று அதிகாலை முதல் காணவில்லை. விசாரணையில், அவர் தப்பிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, காப்பக கண்காணிப்பாளர் சுதப்பிரியா, காசிமேடு போலீசில் புகார் அளித்தார். தொடர் விசாரணையில், சிறுவன் தன் பெற்றோருடன், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, மஹாராஷ்டிரா சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ