உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு

சிங்கப்பூர் விமானத்தில் கோளாறு

சென்னை, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் 'ஏர் இந்தியா' பயணியர் விமானம், நேற்று காலை 11:15 மணிக்கு, 165 பயணியருடன் புறப்பட தயாரானது.விமானம் ஓடுபாதையில் ஓட துவங்கியபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தந்தார்.விமான பொறியாளர்கள் குழு விரைந்து வந்து, பழுதுபார்க்கும் வேலையில் இறங்கினர். இதையடுத்து, விமானம் தாமதாக புறப்படும் என, அறிவிக்கப்பட்டது, பயணியர் விமானத்தின் உள்ளேயே காத்திருந்தனர்.நீண்ட நேரமாகியும், விமானம் பழுதுபார்க்கும் பணி தொடர்ந்ததால் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு 1:45 மணி நேரம் தாமதமாகி, மதியம் 1:00 மணிக்கு, விமானம் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை