உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிரிபிள் செஞ்சுரி அடித்தது சாமந்தி பூ விலை

டிரிபிள் செஞ்சுரி அடித்தது சாமந்தி பூ விலை

சென்னை:தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சாமந்தி பூக்கள் சாகுபடி நடக்கிறது. மேலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வரத்து உள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் சாமந்தி பூக்கள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது. இவற்றில், மாலை, சரம் தொடுக்கப்பட்டு விற்கப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஹிந்து கோவில்களுக்கு, ஐஸ் நிரப்பிய தெர்மாகோல் பெட்டியில் வைத்து, அவை ரயில் மற்றும் விமானங்களில் அனுப்பப்படுகிறது. தற்போது, சாமந்தி பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி, 1 கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை உயர்வு காரணமாக, சாமந்திக்கு பதிலாக விலை குறைந்த பூக்களை வைத்து, மாலை மற்றும் சரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ