உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோலமிட்ட ஆண்கள் பரிசளித்த மேயர் பிரியா

கோலமிட்ட ஆண்கள் பரிசளித்த மேயர் பிரியா

பெசன்ட்நகர், சென்னை மாநகராட்சி சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 'எல்லோருக்குமான சென்னை' என்ற தலைப்பில், பெசன்ட் நகரில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.பெண்கள், ஆபத்தான நேரங்களில் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவ வேண்டும் ஆகிய சிந்தனையை வலியுறுத்தி விழிப்புணர்வு நடந்தது.முக்கிய நிகழ்வாக, ஆண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பங்கேற்று, வண்ண கோலங்கள் போட்டனர்.இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, மாநகராட்சி மேயர் பிரியா, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.இந்நிகழ்ச்சியில், அடையாறு மண்டல அதிகாரி சீனிவாசன், அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை