உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொரோனா பரவல் காலத்தில் ஊடக நிர்வாகம் சவாலாக இருந்தது

கொரோனா பரவல் காலத்தில் ஊடக நிர்வாகம் சவாலாக இருந்தது

சென்னை, ''கொரோனா காலத்தில் ஊடக நிர்வாகம் சவாலாக இருந்தது,'' என, உலகளாவிய ஊடக தலைவர் புர்காயஸ்தா தெரிவித்தார்.ஊடகத் துறையில், 40 ஆண்டுகள் அனுபவம் மிக்க புர்காயஸ்தா, 14 ஆண்டுகள் ஏ.பி.பி., ஊடக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர்.ஊடகத் துறையில் தனது அனுபவங்களை 'ஹெட்லைன் - - ஒரு ஊடக தலைமை செயல் அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்' என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் நுாலாக வெளியிட்டுள்ளார்.இந்நுால் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் மையத்தில், நேற்று மாலை நடந்தது.இதில், ஏ.பி.பி., ஊடக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி துருபா முகர்ஜி, 'தி ஹிந்து' தலைமை செயல் அதிகாரி நவநீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நுாலாசிரியர் புர்காயஸ்தாவிடம், நுாலில் உள்ள சில பகுதிகளை வாசித்து, அது குறித்து பல கேள்விகள் எழுப்பினர். அதுபோல, பார்வையாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.அதற்கு பதிலளித்த புர்காயஸ்தா, ''ஊடகத் துறையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் எனக்கும், நிறுவனத்திற்கும் ஏற்றத்தை கொடுத்தன.ஊடகத் துறை இப்போது சவாலானதாக மாறிவிட்டது. என் பணி அனுபவத்தில் கொரோனா காலத்தில் ஏ.பி.பி., ஊடகத்தை நிர்வகித்ததே மிகப்பெரிய சவாலாக இருந்தது. எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது தொடர்ந்து பணியாற்றினால் தான் கற்றுக் கொள்ள முடியும். அடுத்தடுத்த கட்டங்களுக்கு வெற்றிகரமாக செல்ல முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை