உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம்பெண் கையில் பாய்ந்த மீடியன் கம்பி

இளம்பெண் கையில் பாய்ந்த மீடியன் கம்பி

புளியந்தோப்பு,:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா, 19; பழக்கடை ஊழியர். இவர், நேற்று இரவு 8:30 மணியளவில், சக ஊழியர் ஒருவருடன், ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றார். வேப்பேரி ஈ.வெ.ரா., சாலையில் சென்ற போது, நிலை தடுமாறி, மீடியனில் வெளியே நீட்டிக்கொண்டிருந்த இரும்புக்கம்பி மீது விழுந்தார். இதில், பவித்ராவின் கையில் இரும்புக்கம்பி குத்தி, மறுபக்கம் வந்தது. பவித்ரா வலியால் துடித்தார்.தகவல் அறிந்து வந்த வேப்பேரி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வஜ்ரா மீட்பு படையினர், இரும்புக் கம்பியை இயந்திரத்தால் வெட்டி அகற்றினர். பின், பவித்ராவை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை