உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோழிங்கநல்லுாரில் சிலாப்பை அகற்றி தார் சாலையாக மாற்றும் மெட்ரோ நிர்வாகம்

சோழிங்கநல்லுாரில் சிலாப்பை அகற்றி தார் சாலையாக மாற்றும் மெட்ரோ நிர்வாகம்

சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில், 20 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் சந்திப்பில் ரவுண்டானா மேம்பாலத்துடன், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.இதனால், அங்கு நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும், இரண்டு நிலையங்களில் இருந்து பதித்த தனித்தனி குழாய்கள், சோழிங்கநல்லுார் வழியாக மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம் வரை செல்கின்றன.இதில், சோழிங்கநல்லுார் சந்திப்பில், குடிநீரை பிரித்து அனுப்பும் வகையில், குழாயை திறந்து மூட வசதியாக வால்வு அமைத்து, 15 அடி நீளம், 15 அடி ஆழம், 10 அடி அகலத்தில் தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியின் மேல் பகுதி சிமென்ட் கலவை சிலாப் போட்டு மூடப்பட்டு உள்ளது. இதில் வாகனங்கள் செல்வதற்கான தேவை இல்லாததாக கருதப்பட்டதால், சிலாப்பின் தடிமன் குறைவாக போடப்பட்டது.இந்நிலையில், ரவுண்டான மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், வாகன நெரிசல் ஏற்படலாம். அதனால், தடிமன் குறைவாக போடப்பட்ட சிலாப்பை அகற்றி, அதிக பாரம் தாங்கும் வகையில் சிலாப் அமைக்கப்பட்டு, அதன் மீது தார் சாலை போடப்படுகிறது.இப்பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், தொட்டி இருந்த பகுதி சாலையாக மாற்றி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை