உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புது மதுக்கடை திறப்பதை தடுக்க முதல்வருக்கு எம்.எல்.ஏ., கடிதம்

புது மதுக்கடை திறப்பதை தடுக்க முதல்வருக்கு எம்.எல்.ஏ., கடிதம்

சென்னை, மதுக்கடை திறப்பதை தடுக்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறப்பட்டுள்ள விபரம்:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் அதிகாரிகள், சில ஆபத்தான முயற்சிகளை செய்ய முயன்றுள்ளனர்.மாவட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடைகளின் எண்ணிக்கையில், மீதமுள்ள கடைகளை சாராயம் புழங்கும் நிலையில் உள்ள கிராமங்களில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள், சில கிராமங்களில் இடம் தேர்வுக்கு ஆய்வு செய்கின்றனர்.கள்ளச்சாராய சாவுகளை கொண்டு, ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயன்ற எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துள்ளன. ஆனால், அரசு நிர்வாகத்தின் இந்த முயற்சி, எதிர்க்கட்சிகளின் விருப்பத்தை எளிதாக நிறைவேற்றும்.திருப்போரூர் தொகுதி மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் உள்ள இரு மதுக்கடைகளையும், திருப்போரூர், கொட்டமேடு சந்திப்பில் திறந்தவெளி மதுக்கூடமாக செயல்படும் மதுக்கடையையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை