மேலும் செய்திகள்
2 நாளில் 23 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின
3 minutes ago
நெல்லை பெண்ணின் 5 சவரன் செயினை மீட்டு கொடுத்த போலீஸ்
4 minutes ago
ஸ்வர கணக்குகளில் வசுதா ரவி அபாரம்
7 minutes ago
திருவொற்றியூர்:திருவொற்றியூர், திருச்சிணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 32; மீனவர். இவர், தன் தம்பி உள்ளிட்ட ஐந்து பேருடன், கடந்த 10ம் தேதி காலை, கடலில் மீன் பிடிக்க பைபர் படகில் சென்றார். மீஞ்சூர் அருகே, கடலில் மீன் பிடித்த போது, ராட்சத அலையில் படகு ஆட்டம் கண்டது. இதில், படகில் இருந்த கார்த்திக் நிலைதடுமாறி கடலில் விழுந்தார். உடன் சென்றவர்கள் கடலில் குதித்து தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. பின், மீனவர் கடலில் மாயமானது குறித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடலில் தவறி விழுந்து ஆறு நாட்களாகியும் கிடைக்காத நிலையில், அவரை கண்டுபிடித்து தருமாறு கார்த்திக்கின் தாய் உள்ளிட்ட உறவினர்கள், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
3 minutes ago
4 minutes ago
7 minutes ago