மேலும் செய்திகள்
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம்
07-Oct-2025
நாளைய மின் தடை
07-Oct-2025
சென்னை, தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.சென்னை மாநகராட்சியின் 23வது வார்டு காவாங்கரை, புழல் வழியாக, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை பயணிக்கிறது.இச்சாலை வழியாக, கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், ஆந்திரா மாநிலம் செல்லும் ஆம்னி மற்றும் அரசு பேருந்துகள் அதிக அளவில் பயணிக்கின்றன.திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களுக்கு, சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களும், இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இதனால், 24 மணிநேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருக்கும். இரவு நேரங்களில் காவாங்கரை சந்திப்பில், மாடுகள் அதிக அளவில் படுத்துக் கொள்கின்றன. காலை 8:00 மணிக்குப் பிறகே ஒவ்வொன்றாக எழுந்து செல்கின்றன.சாலையில் படுத்துக் கிடக்கும் மாடுகளால் காலையில் பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவர்கள், ஒருவித பீதியுடன் செல்கின்றனர். அருகில் உள்ள மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களும் அச்சமடைகின்றனர். வேகமாக செல்லும் வாகனங்கள், மாடுகள் மீது மோதி, விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், மாநகராட்சி மண்டல அதிகாரிகள் மட்டுமின்றி, சாலை சந்திப்பில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாரும், மாடுகளை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.பெரிய விபத்துக்கள் நடப்பதற்கு முன், சாலையில் தஞ்சமடையும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
07-Oct-2025
07-Oct-2025