உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெடுஞ்சாலை துறை அலட்சியம் வாகன ஓட்டிகள் திக்... திக்

நெடுஞ்சாலை துறை அலட்சியம் வாகன ஓட்டிகள் திக்... திக்

மாதவரம்:சென்னை, மூலக்கடை - செங்குன்றம் வரை, 9 கி.மீ., துாரமுள்ள மாதவரம் நெடுஞ்சாலையை, 80 அடி அகலத்திற்கு இரு வழி பாதையாக விரிவாக்கம் செய்ய, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு நிதி ஒதுக்கியது.இதையடுத்து, எட்டு ஆண்டுகளுக்கு முன், கிராண்ட் லைன் ஊராட்சி அலுவலகம் வரை, 6.5 கி.மீ., துாரத்திற்கு இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.அதன்பின், மீதமுள்ள 2.5 கி.மீ., துார சாலை விரிவாக்க பணி, இதுவரை நடக்கவில்லை. விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, நெடுஞ்சாலைத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரிவாக்கத்திற்கான நிலம் எவ்வளவு கையகப்படுத்த வேண்டும். அவற்றின் சந்தை மதிப்பீடு எவ்வளவு, நிலத்தின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணம், நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலையும் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க, கடந்த மாதம் 'மில்லிங்' செய்யப்பட்டது.ஆனால், தற்போது வரை சாலை அமைக்கும் பணி துவக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், சாலை அமைக்கும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை