உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாயமான மீனவர் சடலமாக மீட்பு

மாயமான மீனவர் சடலமாக மீட்பு

ராயபுரம், எண்ணுார் அடுத்த எர்ணாவூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் சிலம்பரசன், 31. இவர், ஆறு பேருடன், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் இருந்து நிலை தடுமாறிய சிலம்பரசன், கடலுக்குள் விழுந்தார். அவரை, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் மற்றும் மெரினா கடற்கரையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலை, சிலம்பரசனின் உடல் கரை ஒதுங்கியது. உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை