உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டம் ரூ.1.70 கோடி கட்டடங்கள் திறப்பு

நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டம் ரூ.1.70 கோடி கட்டடங்கள் திறப்பு

சென்னை, நம்ம ஊரு நம்ம பள்ளி' எனும் திட்டத்துக்காக, சமூக பங்களிப்பு நிதியாக, விர்சூசா எனும் நிறுவனம் 1.70 கோடி ரூபாயை பள்ளி கல்வி துறைக்கு வழங்கியது. அதில், சென்னை ராயப்பேட்டை ஹோவர்ட் முஸ்லிம் மேல்நிலை பள்ளி, தாயர் சாகிப் தெரு அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில், ஐந்து கணினி ஆய்வகங்கள் கட்டப்பட்டன. அவற்றை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று திறந்து வைத்தார். பின் அவர் கூறியதாவது: கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், முதல்வர் ஸ்டாலின், தன் சொந்த நிதியாக 5 லட்சம் ரூபாயை அளித்து, இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது வரை 380 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களின் பங்களிப்பை உழைப்பாகவும், நிதியாகவும் அளிக்க, 7.5 லட்சம் பேர் 'விழுதுகள்' திட்டத்தில் பதிவு செய்து உள்ளனர்.இவற்றை பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படித்து, பள்ளிக்கும், பெற்றோருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை