உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.டி.சி.,யில் புதிதாக தாழ்தள பஸ்

எம்.டி.சி.,யில் புதிதாக தாழ்தள பஸ்

சென்னை, மாற்றுதிறனாளி பயணியர், சக்கர நாற்காலியுடன் பேருந்தில் ஏறி பயணம் செய்யும் வகையிலான, புதிய தாழ்தள பேருந்துகள், இன்று முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திகுறிப்பு :இந்த பேருந்துகள், மாற்று திறனாளி பயணியர், சக்கர நாற்காலியுடன் பேருந்தில் ஏறி பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சாலையில் இருந்து பேருந்திற்குள் ஏறும் உயரம் குறைவாக இருக்கும். சாலையின் தன்மைகேற்றாற் போல், உயரத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும். பேருந்தினுள் மாற்று திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் அமர்ந்து பயணம் செய்ய தனி இடவசதி போன்ற சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை