உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு

நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு

சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தரத்திலான மீன் அங்காடி, ஜூன் இரண்டாவது வாரத்தில் திறக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை, பட்டினப்பாக்கம் லுாப் சாலையோரங்களில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் நொச்சிக்குப்பம் பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான மீன் அங்காடி அமைக்கப்படுகிறது.10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் அங்காடியில், 384 கடைகள் கட்டப்பட்டு உள்ளன.மேலும், 155 இருசக்கர வாகனங்கள், 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளன. ஒவ்வொரு கடையும், 6 அடி நீளம், 5 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தனிப்பட்ட கடைக்கும் தண்ணீர் வசதி, மீன் கழுவும் வசதி, மின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான, 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.மேலும், ஜூன் 4ம் தேதிக்கு பின், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படுவதால், ஜூன் இரண்டாவது வாரத்தில் முதல்வர் மீன் அங்காடியை திறந்து வைக்க உள்ளார் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ