உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடற்கரை அழகுபடுத்தும் பணி சி.எம்.டி.ஏ.,வுக்கு நோட்டீஸ்

கடற்கரை அழகுபடுத்தும் பணி சி.எம்.டி.ஏ.,வுக்கு நோட்டீஸ்

சென்னை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் ஒருங்கிணைந்த கடலோர சமூக மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் சைக்கிள் செல்லும் பாதை அமைத்தல், திறந்தவெளி திரையரங்கம், கடைகள், திறந்தவெளி வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின்படி, கடற்கரையில் மணல் திட்டுகளை அழகுபடுத்துதல், பொழுது போக்கிற்காக மாற்றுதல் உள்ளிட்டவை தடைசெய்யப்பட்ட செயலாகும்.அலைகள், புயல்களில் இருந்து பாதுகாக்கும் இயற்கை அரணாக கடற்கரை மணல் குன்றுகள் உள்ளன. கடல் அரிப்பை தடுப்பதிலும், இவை முக்கிய பங்காற்றுகின்றன.எனவே, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் நடக்கும் மேம்பாட்டு பணிகள் குறித்து, தமிழக அரசின் தலைமை செயலர், சி.எம்.டி.ஏ., தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், சென்னை கலெக்டர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 15ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ